கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், கடந்த 3ஆம் திகதி சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டது. இதற்கு முன்னர், வெளிநாட்டினர் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற வேரஹேரவில் உள்ள மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 7ஆம் திகதி அதிகளவான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ரூ. 2,000 என்ற குறைந்த கட்டணத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் இலங்கை சுற்றுலா சாரதிகளின் ஒன்றியம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. குறித்த நடைமுறை காரணமாக, அந்தத் தொழிலை நம்பியிருப்போர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் பிரதிநிதி அமில கோரலகே குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு (News21Tamil) - முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று புதன்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் 2022 மே 09ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் நீதிமன்றைக் கோரியிருந்தார். எனினும், அவரது முன்பிணை கோரிக்கையை, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நிராகரித்தார். இந்நிலையிலேயே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது.

கொழும்பு (News21Tamil) - இலங்கைத் தொழிலாளர்கள் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (19) அறிவித்தார். புதுப்பிக்கப்பட்ட எல்லை பதட்டங்களுக்கு மத்தியில் கம்போடிய தொழிலாளர்கள் திரும்பியதைத் தொடர்ந்து தொழிலாளர் பற்றாக்குறையை போக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி, வயதான மக்கள் தொகை மற்றும் குறைந்து வரும் உள்நாட்டு பணியாளர்களை எதிர்கொள்ளும் தாய்லாந்து, விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் ஏற்கெனவே மூன்று மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியுள்ளது. “30,000க்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்கள் ஏற்கெனவே பதிவு செய்துள்ளனர். ஆரம்ப கட்டத்தில் 10,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள். புதிய கொள்கையின் கீழ், நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் பொங்கவின் ஜங்ருங்ருங்கிட் கூறினார். கடந்த மாதம் தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான எல்லை மோதலில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டு, 300,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. ஆனால், ஆயிரக்கணக்கான கம்போடியத் தொழிலாளர்கள் வீடு திரும்பியதால், தாய்லாந்தில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு (News21Tamil) - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு 2025ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (19) பிற்பகல் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள 04 திணைக்களங்களில் உள்ள 41 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு அடுத்த வரவு - செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்துவதற்கான தற்போதைய திட்டங்கள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார். தற்போது 30,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார சேவையை 10,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப மற்றும் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப சுகாதார சேவையில் நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் இங்கு ஆராயப்பட்டது. மேலும், சுகாதாரத் துறையின் கட்டுமானங்கள் மற்றும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. சுகாதாரத் துறையில் தற்போது எழுந்துள்ள ஒரு பாரிய பிரச்சினையான ஆயுர்வேதத் துறையை உள்ளடக்கிய கொள்முதல் வழிகாட்டுதல்களை புதுப்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டது, அதே நேரத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மருந்துகளை கொள்வனவு செய்யும் போது மருந்துகளின் தரத்தை உறுதி செய்வது தொடர்பான வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது. தேசிய இரத்தமாற்று சேவை போன்ற சேவைகளுக்கு தேவையான வாகனங்களை இந்த வருடத்திற்குள் கொள்வனவு செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். நவீன தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப சுகாதார சேவையின் பௌதீக மற்றும் மனித வளங்களை மாற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு ஒரு தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளின் கீழ் பெறப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்தி, அவற்றினால் எதிர்பார்க்கும் பயனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மாகாண சபை மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்து வைப்பது குறித்தும் இதன்போது பரிந்துரைக்கப்பட்டது. சுகாதாரத் துறையில் வழங்கப்படும் நன்கொடைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மானியங்களை வழங்கும் மற்றும் பெறும் நபர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் முன்மொழியப்பட்டது. தற்போது நாட்டின் 272 இடங்களில் செயற்படுத்தப்படும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை மேலும் விரிவுபடுத்தி, அதனை 400 இடங்கள் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் நண்டுகளைப் பார்த்திருக்கலாம். ஆனால், ஊதா நிற நண்டுகளைப் பார்த்ததுண்டா? இந்த அரிய வகை நண்டுகள், தாய்லந்தில் காணப்பட்டுள்ளன. ஊதா நிற நண்டுகளின் படங்களை தாய்லந்தின் தேசியப் பூங்கா, வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புப் பிரிவு தமது Facebook பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. நண்டுகளின் உடலில் ஒரு பகுதி வெள்ளையாகவும் இன்னொரு பகுதி ஊதா நிறமாகவும் காணப்படுகிறது. பேட்சபூரி வட்டாரத்தின் Kaeng Krachan National Park பூங்காவில் அவை காணப்பட்டதாக தாய்லந்தின் தேசியப் பூங்கா, வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது. இந்த அரிய வகை நண்டுகள் அங்கிருப்பது பூங்காவின் பல்லுயிர்ச்சூழல் ஆரோக்கியமாய் இருப்பதைப் பிரதிபலிப்பதாகவும் அப்பிரிவு கூறியது. ஊதா நிற நண்டின் படங்களைக் கண்ட இணையவாசிகள் அதன் அழகில் பிரமித்து, பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது.
கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் நண்டுகளைப் பார்த்திருக்கலாம். ஆனால், ஊதா நிற நண்டுகளைப் பார்த்ததுண்டா? இந்த அரிய வகை நண்டுகள், தாய்லந்தில் காணப்பட்டுள்ளன. ஊதா நிற நண்டுகளின் படங்களை தாய்லந்தின் தேசியப் பூங்கா, வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புப் பிரிவு தமது Facebook பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. நண்டுகளின் உடலில் ஒரு பகுதி வெள்ளையாகவும் இன்னொரு பகுதி ஊதா நிறமாகவும் காணப்படுகிறது. பேட்சபூரி வட்டாரத்தின் Kaeng Krachan National Park பூங்காவில் அவை காணப்பட்டதாக தாய்லந்தின் தேசியப் பூங்கா, வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது. இந்த அரிய வகை நண்டுகள் அங்கிருப்பது பூங்காவின் பல்லுயிர்ச்சூழல் ஆரோக்கியமாய் இருப்பதைப் பிரதிபலிப்பதாகவும் அப்பிரிவு கூறியது. ஊதா நிற நண்டின் படங்களைக் கண்ட இணையவாசிகள் அதன் அழகில் பிரமித்து, பகிர்ந்து வருகின்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் காலாவதியான உணவுப்பொருள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கியோட்டோ, ஓசாகா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது 20-க்கும் மேற்பட்ட கடைகளில் காலாவதியான பொருட்கள் மீது போலியான ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து நாடு முழுவதும் சுமார் 1,600 உணவுப்பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17) வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்.