பதுளை மாவட்ட பாடசாலைகள் இன்று காலை 11 மணிக்கு மூடப்படும்
அனர்த்த எச்சரிக்கையை கருத்தில்கொண்டே பதுளை மாவட்ட பாடசாலைகள் இன்று காலை 11 மணிக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை 11 மணிக்கு மூடப்படும் என்று ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன அறிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் மினிபே, மெததும்பர, பன்வில, தொலுவ, தெல்தோட்டை மற்றும் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவுகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் நேற்று (08) பிற்பகல் மண்சரிவுகள் அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அனர்த்த எச்சரிக்கையை கருத்தில்கொண்டே பதுளை மாவட்ட பாடசாலைகள் இன்று காலை 11 மணிக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்த ஆபத்தான சூழ்நிலைகளில் பாடசாலைகளை நடத்துவது பொருத்தமற்றது என்று கருதப்பட்டால், சம்பந்தப்பட்ட வலயப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி, அத்தகைய பாடசாலைகளை இன்று (09) நடத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிபர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.