பிரிட்டனின் புதிய கடவுச்சீட்டு விதிகள்: இரட்டை குடியுரிமையாளர்களுக்கு சிக்கல்

பல ஆண்டுகளாக பிரிட்டனில் வசிக்கும் பலர் தங்களின் சொந்த நாட்டிற்குள் நுழைய முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

பிரிட்டனின் புதிய கடவுச்சீட்டு விதிகள்: இரட்டை குடியுரிமையாளர்களுக்கு சிக்கல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிப்ரவரி 25 முதல் அமலுக்கு வரும் புதிய கடவுச்சீட்டு விதிகளால், பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இரட்டை குடியுரிமையாளர்கள் (Dual Nationals) கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதுவரை விசா தேவையில்லாத நாடுகளின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரிட்டனுக்குள் நுழைந்தவர்கள், இனி பிரிட்டிஷ் கடவுச்சீட்டு அல்லது 'தகுதிச் சான்றிதழ்' (Certificate of Entitlement) வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனால் பல ஆண்டுகளாக பிரிட்டனில் வசிக்கும் பலர் தங்களின் சொந்த நாட்டிற்குள் நுழைய முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த புதிய முறை எல்லைப் பாதுகாப்பை நவீனப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டதாக அரசாங்கம் கூறினாலும், இதற்கான கூடுதல் செலவு மற்றும் கால அவகாசம் மக்களைக் கவலையடையச் செய்துள்ளது. ஒரு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுக்கு சுமார் £100 செலவாகும் நிலையில், தகுதிச் சான்றிதழுக்கு £589 வரை வசூலிக்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT