வில்லியம் அல்ல ஹரி மன்னராக வேண்டும்: இளவரசி டயானா வைத்திருந்த திட்டம்; நண்பர் சொன்ன தகவல்

பிரித்தானிய இளவரசி டயானா உயிருடன் இருந்த காலத்தில், தனது மூத்த மகனான இளவரசர் வில்லியத்தை விட இளைய மகனான இளவரசர் ஹரியே எதிர்காலத்தில் மன்னராக வேண்டும் என எண்ணியிருந்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வில்லியம் அல்ல ஹரி மன்னராக வேண்டும்: இளவரசி டயானா வைத்திருந்த திட்டம்; நண்பர் சொன்ன தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரித்தானிய இளவரசி டயானா உயிருடன் இருந்த காலத்தில், தனது மூத்த மகனான இளவரசர் வில்லியத்தை விட இளைய மகனான இளவரசர் ஹரியே எதிர்காலத்தில் மன்னராக வேண்டும் என எண்ணியிருந்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளரும் டயானாவின் நண்பருமான ரிச்சர்ட் கே கூறுகையில், சிறுவயதில் இளவரசர் வில்லியம் மிகவும் வெட்கம் உடையவராக இருந்ததாக டயானா தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். அதனால் தான் சார்லசுக்குப் பிறகு ஹரி மன்னராக வேண்டும் என டயானா எண்ணியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ரிச்சர்ட் கே கூறியதன்படி, டயானா தனது இளைய மகனான ஹரியை சிறுவயதில் “Good King Harry” என அன்பாக அழைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், மன்னராகும் பொறுப்பில் வில்லியத்திற்கு அதிக ஆர்வம் இல்லை என டயானா ஒருகாலத்தில் கூறியதாகவும் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, எதிர்காலத்தில் ஹரியை எப்படி மன்னராக மாற்றலாம் என்பது குறித்து டயானா யோசித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இறுதியில் டயானாவின் அந்த எண்ணம் நடைமுறைக்கு வரவில்லை என்றும், அது நல்லதே எனவும் ரிச்சர்ட் கே நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT