பிரித்தானியாவில் கடும் குளிர் மற்றும் மழை எச்சரிக்கை – மக்களுக்கு முக்கிய அறிவுரை

பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலை நிலவும் அபாயம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை வரும் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை அமலில் இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் கடும் குளிர் மற்றும் மழை எச்சரிக்கை – மக்களுக்கு முக்கிய அறிவுரை
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலை நிலவும் அபாயம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை வரும் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை அமலில் இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு கீழ் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு அயர்ஷையரில் உள்ள கம்னாக் பகுதியில் வெப்பநிலை -4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்கொட்லாந்தின் பல பகுதிகளில் பனி பெய்யும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் சுமார் 10 செ.மீ வரை பனி சேரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கிடையில் மேற்கு மற்றும் கிழக்கு ஸ்கொட்லாந்தில் தற்போது அமலில் உள்ள கனமழை எச்சரிக்கை புதன்கிழமை நள்ளிரவு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் சில இடங்களில் வெள்ள அபாயமும் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே சீரற்ற வானிலை நிலையை கருத்தில் கொண்டு மக்கள் தங்களது பயணத் திட்டங்களை முன்னெடுக்கும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT