பாபா வங்கா கணிப்பு: 2026-ன் இரண்டாம் பாதியில் கோடீஸ்வரராகும் யோகம் பெற்ற 4 அதிர்ஷ்ட ராசிகள்!

பாபா வாங்காவின் கணிப்புப்படி 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய 4 ராசிகளுக்குத் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்ஷ்டமும் செல்வச் செழிப்பும் உண்டாகப் போகிறது.
பாபா வங்கா கணிப்பு: 2026-ன் இரண்டாம் பாதியில் கோடீஸ்வரராகும் யோகம் பெற்ற 4 அதிர்ஷ்ட ராசிகள்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணிக்கும் உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா (1911 - 1996) கூறிய பல கணிப்புகள், இப்போது ஒவ்வொன்றாக உண்மையாகி வருகின்றன.

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாகக் காத்திருந்த அதிர்ஷ்ட வாய்ப்புகளும், அபரிமிதமான செல்வச் செழிப்பும் தேடி வரப்போவதாக பாபா வாங்காவின் கணிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் ஜொலிக்கப் போகும் அந்த 4 ராசிகள் யார் யார் என்று இங்கு காண்போம்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மிதுனம்

புதன் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசியினருக்கு 2026-ன் இரண்டாம் பாதி அசுர வளர்ச்சியைத் தரும். இக்காலத்தில் உங்களின் போட்டித்தன்மை அதிகரித்து, எதிரிகளையும் போட்டியாளர்களையும் எளிதில் வீழ்த்துவீர்கள். உங்களுக்குப் பின்னால் துரோகம் செய்தவர்களின் முகத்திரை வெளிச்சத்திற்கு வரும். குடும்பத்தில் இருந்த நீண்ட நாள் சண்டைகள் மற்றும் மனக்கசப்புகள் ஆண்டின் இறுதிக்குள் முடிவுக்கு வந்து அமைதி நிலவும். நிதி நெருக்கடியால் பாதியில் நின்ற அனைத்துப் பணிகளும் இப்போது தடையின்றி வெற்றிகரமாக முடியும்.

கன்னி

புதனின் ஆதிக்கம் நிறைந்த கன்னி ராசியினருக்கு இந்த ஆண்டின் மீதிப் பகுதி மிகவும் மங்களகரமானதாக அமையப்போகிறது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத நல்ல லாபம் கிடைப்பதுடன், வருமானத்தை உயர்த்த புதிய வழிகளும் பிறக்கும். அலுவலகத்தில் உங்களின் திறமையான செயல்பாடுகள் சக ஊழியர்களையும் உயர் அதிகாரிகளையும் கவரும். உங்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகள் செல்வத்தை ஈட்டித் தரும் முக்கிய காரணியாக மாறும்.

விருச்சிகம்

செவ்வாய் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியினருக்கு 2026-ன் பிற்பாதி சிக்கல்கள் தீரும் காலமாக இருக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் இருந்த பெரும்பாலான குழப்பங்கள் நீங்கி அதிர்ஷ்டம் பெருகும். தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுவதுடன், சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க மனிதர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இதுவே மிகச் சிறந்த தருணம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்; வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வி பயிலும் வாய்ப்புகளும் உண்டாகும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மகரம்

சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற மகர ராசியினருக்கு 2026-ன் இரண்டாம் பாதி ஞானமும் மன அமைதியும் நிறைந்ததாக இருக்கும். பல நாட்களாக உங்களை வாட்டி வதைத்த மன அழுத்தங்களில் இருந்து முழுமையான நிம்மதி கிடைக்கும். உங்களின் ஆடம்பர வசதிகள் மற்றும் வாழ்க்கை தரம் உயரும். குடும்பத்தினருடன் ஆன்மீகப் பயணங்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் உண்டாகும். உங்கள் சிந்தனையை நேர்மறையாக மாற்றும் அறிவார்ந்த மனிதர்களின் சந்திப்பு இந்த காலகட்டத்தில் நிகழும்.

பொறுப்புத் றப்பு: இக்கட்டுரையில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் பரவலாகக் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் பொதுவான ஜோதிட அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. இதற்கு அறிவியல் ரீதியான உத்தரவாதம் இல்லை. தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட நிபுணர்களை அணுகி ஆலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -