பாபா வங்காவின் கணிப்பு: ஒக்டோபர் முதல் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அதிஷ்ட மழையில் நனையவுள்ள  5 ராசிகள்!

பாபா வங்காவின் 2026 ஆண்டின் கடைசி மூன்று மாதங்களுக்கான கணிப்புகளின்படி மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய 5 ராசிகளுக்குத் தொழில் வளர்ச்சி மற்றும் அபரிமிதமான பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது.

பாபா வங்காவின் கணிப்பு: ஒக்டோபர் முதல் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அதிஷ்ட மழையில் நனையவுள்ள  5 ராசிகள்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகப் புகழ்பெற்ற பல்கேரிய பெண் தீர்க்கதரிசியான பாபா வங்காவின் பல்வேறு எதிர்காலக் கணிப்புகள் ஏற்கனவே உண்மையாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், 2026-ஆம் ஆண்டு தொடர்பான அவரது கணிப்புகள் தற்போது இணையத்தில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வைரல் கணிப்புகளின்படி, 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கடைசி மூன்று மாதங்களில், கிரக நிலைகளின் தாக்கத்தால் ஐந்து குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும், தொழில் வளர்ச்சியும், எதிர்பாராத பண வரவுகளும் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மிதுன ராசியைப் பொறுத்தவரை, ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் மிகவும் சாதகமான சூழலை உருவாக்கும். இக்காலகட்டத்தில் இவர்கள் தங்கள் எதிரிகளை வீழ்த்துவார்கள். நண்பர்களின் போர்வையில் உள்ள துரோகிகளை அடையாளம் கண்டு விலக்க முடியும்.

குடும்பப் பிரச்சினைகள் தீர்ந்து அமைதி நிலவும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதுடன், புதிய வருமான வழிகள் திறக்கப்பட்டு பொருளாதாரப் பற்றாக்குறையால் முடங்கிக் கிடந்த பணிகளை முடிக்க வழிவகை செய்யும். வேலை மற்றும் வணிகத்தில் உள்ளவர்களுக்கு நிதி நிலை கணிசமாக உயரும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் இறுதி மாதங்கள் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும் கனவை நிறைவேற்றும் தருணமாக அமையும். முந்தைய முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பணியிடத்தில் தங்கள் கடின உழைப்பால் அதிகாரிகளையும் சக ஊழியர்களையும் கவர்ந்து நற்பெயர் பெறுவர். குடும்பத் தலைவரின் உடல்நிலை சீரடைந்து மன அழுத்தம் குறையும். மேலும், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் எடுக்கப்படும் தைரியமான முடிவுகள் நல்ல நிதி வளர்ச்சியைத் தரும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த அழுத்தங்கள் குறைந்து அதிர்ஷ்டம் கூடும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், முக்கிய நபர்களின் அறிமுகத்தால் எதிர்காலத்தில் நன்மைகள் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கும், வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்புகள் அமைவதற்கும் இந்த இறுதி காலாண்டு நல்ல வாய்ப்புகளைத் தரும்.

மகர ராசியினருக்கு இக்காலகட்டம் வாழ்க்கையில் சமநிலையையும் நிதி ஸ்திரத்தன்மையையும் வழங்கும். மன அழுத்தங்களிலிருந்து விடுதலை கிடைத்து வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்துடன் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வதற்கும், அறிவார்ந்த மனிதர்களைச் சந்தித்து நேர்மறை ஆற்றலைப் பெறுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும்.

மீன ராசிக்காரர்களுக்கு வருமான உயர்வும், வெளிநாட்டுப் பயணம், கல்வி மற்றும் அது சார்ந்த நிதி நன்மைகளும் கிட்டும். சொந்த அனுபவத்தின் மூலம் பெரிய அளவில் பொருளாதார வெற்றியை எட்டுவார்கள்.

மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சொத்து மற்றும் நிலம் சார்ந்த முதலீடுகளைக் கொண்டவர்களுக்கு இந்த ஆண்டின் இறுதி மிகவும் சாதகமாக இருக்கும். வியாபார விரிவாக்கம், தம்பதியினருக்கு இடையேயான புரிதல் மற்றும் இல்லற வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன் நிலையான வருமான உயர்வும் கிடைக்கும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT