சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி 2026: அடுத்த மூன்று மாதங்களில் அதிர்ஷ்டம் பெறும் நான்கு ராசிகள்
அக்டோபர் மாத இறுதியான முப்பத்தொன்றாம் தேதி குரு பகவான் அதிசாரமாக கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இவருடைய அதிசார நிலை டிசம்பர் பதின்மூன்றாம் தேதி முடிந்து, பின்னோக்கி நகரத் தொடங்கி 2027 ஜனவரி இருபத்துநான்காம் தேதி மீண்டும் கடக ராசியில் நுழைய உள்ளார். அந்தத் தேதி வரையிலான காலத்தில் குரு சிம்மத்தில் இருக்கும் நிலையில் சில ராசிகளுக்கு மங்களகரமானதாகவும், நன்மைகள் அதிகமாகக் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கும்.
குரு பகவான் தற்போது அதிசார நிலையில் உள்ளார். இதனால் அக்டோபர் முப்பத்தொன்றாம் தேதி கடக ராசியிலிருந்து சிம்ம ராசியில் நுழைய உள்ளார். குருவும் சூரியனும் நட்பு கிரகங்கள். இவர் 2027 ஜனவரி இருபத்துநான்காம் தேதி வரை சிம்ம ராசியில் இருப்பார். அதன் பின்னர் மீண்டும் கடக ராசிக்கு திரும்புவார்.
இதனால் அடுத்த மூன்று மாத காலத்தில் சில ராசிகளின் வாழ்க்கையில் நம்பிக்கையும் மாற்றமும் அதிகரிக்கும். அவர்களுடைய மரியாதை வீட்டிலும் சமூகத்திலும் அதிகரிக்கும். அவர்களுடைய வாழ்க்கையில் நேர்மறையான நல்ல மாற்றங்கள் ஏற்பட உள்ளன. எந்தெந்த ராசிகள் குருவின் இந்த நகர்வால் நன்மையைப் பெறுவார்கள் எனத் தெரிந்துகொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீடான சிம்ம ராசியில் குரு நுழைவதால், உங்களுடைய நிதி நிலைமை மேம்படும். நீங்கள் எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்திலிருந்தும் பணியிடத்திலிருந்தும் சில நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். வேலை தொடர்பான வெற்றி நிறைவானதாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கக்கூடிய நல்லிணக்கம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் நேர்மறையான பலன்களை அனுபவிப்பீர்கள். தொழில் சார்ந்த சூழல் மேம்படும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்கு தன வரவு அதிகரிக்கும் காலம் இது. குரு சிம்ம ராசியில் சஞ்சரிக்கக் கூடிய காலத்தில் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும் விதமான வேலையும் தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதில் வெற்றி பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும். மேலும் நிதிநிலையில் இறுதியான முன்னேற்றத்தைச் சந்திப்பீர்கள். உடல்நலப் பிரச்சினைகள் சற்று தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. இருப்பினும் உங்களுடைய ஒழுக்கமும் உணவில் காட்டும் அக்கறையும் உங்களுக்கு நிவாரணத்தைத் தரும். நீங்கள் திட்டமிட்டுச் செயல்படக் கூடிய இந்த ஒரு பணியிலும் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உண்டு. புதிய விஷயங்களைத் தொடங்குவீர்கள்.
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களுக்கு குருவின் இந்தப் பெயர்ச்சி பலவிதத்தில் நன்மைகளைத் தரக்கூடியதாக அமையும். உங்களுடைய லாப ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் நடப்பது உங்களுக்கு நிதி நிலை ரீதியாக முன்னேற்றத்தையும், பல நல்ல வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்களைக் கிடைக்கச் செய்யலாம். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிக்க முடியும். வேலை தொடர்பாக உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும். புதிய வருமான வழிகளும், கடுமையான உழைப்பால் லாபமும் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியானதாக மாறும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்கு மிகவும் சிறப்பான பலனைத் தரக்கூடிய ஒன்பதாம் இடத்தில் குருவின் நகர்வு நடக்க உள்ளது. இதன் காரணமாக உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் வசதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணியிடத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவீர்கள். உங்களுடைய செலவுகள் குறையும், சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு காதல் அல்லது திருமணம் தொடர்பாக நல்ல துணை கிடைப்பார்கள்.
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையானவை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணரை அணுகவும்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.