30 ஆண்டுகளின் பின்னர் மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகும் சனி பகவான்: 2027-ல் சனி தோஷத்திலிருந்து விடுபடும் மற்றும் பாதிக்கப்படும் ராசிகள்

வேத ஜோதிடத்தின்படி நீதிமானாகக் கருதப்படும் சனி பகவான், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03 ஆம் திகதி காலை 6.23 மணிக்கு மீன ராசியிலிருந்து செவ்வாயின் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார்.

30 ஆண்டுகளின் பின்னர் மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகும் சனி பகவான்: 2027-ல் சனி தோஷத்திலிருந்து விடுபடும் மற்றும் பாதிக்கப்படும் ராசிகள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

வேத ஜோதிடத்தின்படி நீதிமானாகக் கருதப்படும் சனி பகவான், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03 ஆம் திகதி காலை 6.23 மணிக்கு மீன ராசியிலிருந்து செவ்வாயின் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார்.

கிரகங்களிலேயே ஒரு ராசியில் நீண்ட காலமாக அதாவது இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிக்கக்கூடிய சனி பகவான், மேஷ ராசியில் நீச்சமடைகின்றார். இந்தச் சனிப் பெயர்ச்சியின் காரணமாக கும்பம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய மூன்று ராசிக்காரர்கள் சனி பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறவுள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான் மேஷ ராசிக்கு மாறும்போது, ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு உள்ளாகும் ராசிகளில் மாற்றங்கள் ஏற்படும்.

கும்ப ராசிக்காரர்கள்

இதன்படி, கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள்.  இதனால், இதுவரை அவர்கள் எதிர்கொண்டு வந்த சிரமங்கள் குறைவதுடன், தொழில் மற்றும் வியாபாரத் தடைகள் நீங்கி நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையிலிருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறுவதுடன், புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிம்ம ராசிக்காரர்கள்

இதேவேளை, சிம்ம ராசிக்காரர்கள் அஷ்டம சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவதால், அவர்களின் வாழ்வில் நிலவிய கஷ்டங்கள் குறைந்து தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிட்டும். வியாபாரத்தில் காணப்பட்ட மந்த நிலை நீங்கி சிறந்த நிதி ஆதாயங்கள் கிடைப்பதுடன், குடும்பச் சூழலும் முன்பை விட மகிழ்ச்சிகரமாக அமையும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

தனுசு ராசிக்காரர்கள்

மேலும், தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்தப் பெயர்ச்சி சாதகமாக அமைந்து, பல நாட்களாக நீடித்த பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளும் முன்னேற்ற வாய்ப்புகளும் கிடைப்பதுடன், நிதி நெருக்கடிகள் நீங்கி முடிக்கப்படாமலிருந்த வேலைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

மேஷம், மீனம் மற்றும் ரிஷபம்

மறுபுறம், சனி பகவான் மேஷ ராசிக்குள் நுழைவதால் மேஷம், மீனம் மற்றும் ரிஷபம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் தொடங்குகின்றது. இதன்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டமும், மீன ராசிக்காரர்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமும், ரிஷப ராசிக்காரர்களுக்கு முதலாவது கட்டமும் ஆரம்பமாகவுள்ளது.

இதன் காரணமாக, மேஷம், மீனம் மற்றும் ரிஷபம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் பணம் சார்ந்த விடயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. குறிப்பாக, தொழிலில் அவசர முடிவுகளை எடுப்பதையும், புதிய முயற்சிகளை ஆரம்பிப்பதையும், முதலீடுகளை மேற்கொள்வதையும் தவிர்த்து அனைத்து விடயங்களிலும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT