சனி பகவானின் நேரடி இயக்கத்தால் சவால்களை எதிர்கொள்ளவுள்ள மூன்று ராசிகள்... கவனமாக இருங்க!
ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சக்திவாய்ந்ததும் மெதுவாக நகரக்கூடியதுமான கிரகமாகக் கருதப்படும் சனி பகவான், எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி மீன ராசியில் வக்ர நிலையிலிருந்து நேரடி இயக்கத்திற்கு மாறவுள்ளார்.
கர்மா, நீதி, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அதிபதியாகக் கருதப்படும் சனி பகவானின் இந்த முக்கிய கிரக நகர்வு, மேஷம், சிம்மம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி நிலைமைகளில் பல்வேறு சவால்களை ஏற்படுத்தக்கூடும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதனால் குறித்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி சார்ந்த தீர்மானங்களை எடுக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேஷ ராசி
ஏழரைச் சனியின் முதற்கட்டத்தை அனுபவித்து வரும் மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பன்னிரண்டாம் வீட்டில் நேரடி இயக்கத்தில் பயணிக்கவுள்ளார். ஜோதிடத்தின்படி பன்னிரண்டாம் வீடு செலவுகள், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் இடமாற்றம் ஆகியவற்றைக் குறிப்பதால், தொழில் நிமித்தமாக இடமாற்றம் செய்யவோ அல்லது வெளிநாட்டு வாய்ப்புகளைப் பெறவோ எதிர்பார்த்திருப்பவர்கள் வழக்கத்தை விட அதிக காலம் காத்திருக்க நேரிடும். மேலும் திடீர் மற்றும் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதோடு, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் கருத்து வேறுபாடுகளும் தவறான புரிதல்களும் தோன்றக்கூடும். சரியான திட்டமிடல், பொறுமை மற்றும் தெளிவான உரையாடல்கள் மூலம் மேஷ ராசிக்காரர்கள் இந்த நெருக்கடிகளைக் கடக்க முடியும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவான் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் இது அஷ்டம சனி காலமாக அமைகிறது. இதன் காரணமாக பணியிடங்களில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதுடன், பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதில் தாமதங்களும் சிரமங்களும் உருவாகலாம். முக்கியமான கடமைகளை நிறைவேற்ற மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தாங்களாகவே பொறுப்பேற்றுச் செயற்படுவது சிறந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக மன அழுத்தமும் தயக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளதோடு, நிதி நிலைமை சீராக இருந்தாலும் ஆரோக்கியம் தொடர்பான விடயங்களுக்காக அதிக பணம் செலவிட வேண்டிய சூழல் உருவாகலாம்.
மீன ராசி
சனி பகவான் தற்போது சஞ்சரிக்கும் மீன ராசியிலேயே நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால், மீன ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டத்தை எதிர்கொள்கின்றனர். சனி பகவான் முதல் வீட்டில் அமர்ந்திருப்பதன் விளைவாகப் பணியிடங்களில் கூடுதல் பொறுப்புகளும் அழுத்தங்களும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தொழில் மாற்றத்திற்கு முயற்சிப்பவர்கள் அவசரப்பட்டு எந்தத் தீர்மானத்தையும் எடுக்க வேண்டாம் எனவும், உயர் அதிகாரிகளுடன் உரையாடும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். அத்துடன் திருமண வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையுடன் செயற்படுவது அவசியம் என்பதுடன், பிள்ளைகள் தொடர்பான கவலைகளும் இக்காலப்பகுதியில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.