அலை உயர்ந்தபோது பாறைகளில் சிக்கிய தாய் உயிரிழப்பு: மகள் கண்முன்னே நடந்த சோகம்

பிரித்தானியாவின் லோவெஸ்டோஃப்ட் கடற்கரையில் பாறைகளுக்கு இடையில் தலை சிக்கிய நிலையில் 32 வயதான பெண் அலை உயர்ந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அலை உயர்ந்தபோது பாறைகளில் சிக்கிய தாய் உயிரிழப்பு: மகள் கண்முன்னே நடந்த சோகம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரித்தானியாவின் Lowestoft கடற்கரை பகுதியில் நடந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான Saffron Cole-Nottage, கடல் அலை உயர்ந்துகொண்டிருந்த நேரத்தில் பாறைகளுக்கு இடையில் தலை சிக்கிய நிலையில் உயிரிழந்தார்.

கடந்த பிப்ரவரி 2ஆம் திகதி, தனது மகளும் நாயும் உடன் கடற்கரை நடைபாதையில் சென்றுகொண்டிருந்த போது அவர் தவறி விழுந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுந்தபோது, கடற்கரை பாதுகாப்பு பாறைகளுக்கு இடையில் அவரது தலை சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த சம்பவத்தை பார்த்த அவரது சிறுமகள் உதவிக்காக கத்தி அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த Alex Singleton-Dent, கைபேசி ஒளியால் பார்த்தபோது பாறைகளுக்குள் இரண்டு கால்கள் மட்டும் தெரிந்ததாக தெரிவித்துள்ளார்.

அவரும் மற்றொரு பொதுமகனான Ian Jones இணைந்து அவரை மீட்க முயன்றாலும், சிக்கிய நிலையில் இருந்ததால் அவரை வெளியே எடுக்க முடியவில்லை.

மாலை 7.52 மணிக்கு அவசர சேவைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு படையினர் சுமார் அரை மணி நேரம் கழித்து 8.22 மணிக்கே சம்பவ இடத்துக்கு வந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உயிரிழந்த பெண்ணின் மகள், தனது தாய் தொடர்ந்து உதவி கேட்டு கத்திக்கொண்டிருந்ததாகவும், ஆம்புலன்ஸ் வர காத்திருந்த நேரம் முடிவில்லாததாக உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

விசாரணையில், சம்பவத்துக்கு முன்பு Hatfield Hotel விடுதியில் உணவு மற்றும் மதுபானம் அருந்தியிருந்ததாக அவரது துணைவர் Mike Wheeler தெரிவித்துள்ளார்.

உடற்கூறு ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் Raj Logasundarum, அவரது ரத்தத்தில் அதிக அளவு மதுபானம் இருந்ததாகவும், அது அவரது சிந்தனை மற்றும் செயல்பாட்டு திறனை கடுமையாக பாதித்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, சாஃப்ரன் கோல்-நாட்டேஜின் மரணம் நீரில் மூழ்கியதாலேயே ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT