திமுக–காங்கிரஸ் மோதல்: தொகுதி பங்கீடு சர்ச்சை; 21 தொகுதிகள் மட்டுமே வழங்குவோம்... கெத்து காட்டும் ஸ்டாலின்

காங்கிரஸ் தரப்பில் இருந்து 41 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது திமுகவுக்கு அதிர்ச்சி அளித்தது.

திமுக–காங்கிரஸ் மோதல்: தொகுதி பங்கீடு சர்ச்சை; 21 தொகுதிகள் மட்டுமே வழங்குவோம்... கெத்து காட்டும்  ஸ்டாலின்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழக தேர்தல் திருவிழா நெருங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சி திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை நடத்தும் பணியில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் திமுக தலைவரும் முதல்வரும் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் திமுகவின் கனிமொழி மற்றும் காங்கிரசின் சிங் தியோ உடன் இருந்தனர்.

காங்கிரஸ் தரப்பில் இருந்து 41 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது திமுகவுக்கு அதிர்ச்சி அளித்தது. திமுக தரப்பு, கூட்டணியில் தேமுதிக போன்ற பிற கட்சிகள் இணைந்துள்ளதால், 21 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் எனக் கூறியுள்ளது. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியுடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

திமுகவின் நோக்கம் 160 தொகுதிகளுக்கு மேல் தனியாக நிற்பதாகும். 'பாஜக கூட்டணியை வீழ்த்துவதே நமது இலக்கு, அதற்காக சில தொகுதிகளை தியாகம் செய்ய வேண்டும்' என திமுக கூட்டணி கட்சிகளிடம் தெரிவித்துள்ளது. இதனை விசிக, இடது சாரி மற்றும் மற்ற கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்டனர்; ஆனால் காங்கிரஸ் மட்டும் பிடிவாதம் காட்டுகிறது.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக–காங்கிரஸ் கூட்டணி 25 தொகுதிகளில் போட்டியிட்டது. திமுக தரப்பின் திட்டமிடலின் படி கூடுதல் 3 தொகுதிகள் வழங்கலாம் என இருந்தாலும், காங்கிரஸ் அதிக பங்கு மற்றும் அதிகாரத்தை கோருவதால் ஸ்டாலினுக்கு அது பிடிக்கவில்லை.

மேலும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்கள் திமுகவை விமர்சித்ததால் ஸ்டாலினுக்கு கோபம் ஏற்பட்டது. இதனால் அடுத்த பேச்சுவார்த்தைகளில், மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச முடியும் என்று திமுகக் கட்சி கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இத்தகைய நிலைமையால், 21 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் எந்த தொகுதியையும் பெற முடியாது. ராஜ்யசபா சீட்டு வழங்கப்படுவதில்லை என்றும் திமுக உறுதி செய்துள்ளது. கூட்டணியில் சேர விரும்பினால் சேருங்கள், இல்லையெனில் வெளியேறுங்கள் என்ற முடிவில் திமுக வந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT