இந்தோனேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவிலை புனரமைக்க இந்தியா திட்டம்

இந்தோனேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பரம்பானன் சிவன் கோவிலை புனரமைக்க இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்தோனேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவிலை புனரமைக்க இந்தியா திட்டம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். தனது பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசியா சென்றடைந்த அவரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விமான நிலையத்திற்கே நேரடியாக வந்து உற்சாகமாக வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து, தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற இருதரப்பு உயர்மட்டக் கூட்டத்தில், இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ஜாவா தீவில் அமைந்துள்ள 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத் தலமான 'பரம்பானன்' சிவன் கோவிலுக்குப் பிரதமர் மோடி இன்று நேரில் செல்கிறார்.

அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் இணைந்து இந்த வரலாற்றுப் பாரம்பரியமிக்க கோவிலைப் பார்வையிடும் பிரதமர், அதன் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான கூட்டுத் திட்டத்தையும் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

தொன்மை வாய்ந்த இக்கோவிலைப் புதுப்பிக்கும் பணிகளில் இந்தோனேசிய அரசுடன் இணைந்து இந்தியாவும் முக்கியப் பங்காற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT