"எனக்கு நானே கொடுத்த மிகப்பெரிய பரிசு" - கருமுட்டை உறையவைத்தது குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை கிரித்தி சனோன்

பாலிவுட் நடிகை கிரித்தி சனோன், 'ஹ்யூமன்ஸ் ஆப் பாம்பே' பாட்காஸ்டில் தான் கருமுட்டையை உறையவைத்த விவகாரத்தை முதன்முதலில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

"எனக்கு நானே கொடுத்த மிகப்பெரிய பரிசு" - கருமுட்டை உறையவைத்தது குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை கிரித்தி சனோன்
ADVERTISEMENT
ADVERTISEMENT

'ஹவுஸ்புல் 4', 'ஆதிபுருஷ்', 'க்ரு' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, 'மிமி' படத்திற்காக தேசிய விருதும் பெற்ற பாலிவுட் நடிகை கிரித்தி சனோன், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த மிக முக்கியமான ஒரு விஷயத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

தனுசுக்கு ஜோடியாக நடித்த 'தேரே இஷ்க் மே' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ஷாஹித் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானாவுடன் இணைந்து 'காக்டெய்ல் 2' படத்திலும் நடித்து வரும் இவர், 'ஹ்யூமன்ஸ் ஆப் பாம்பே' யூடியூப் பாட்காஸ்டில் கலந்துகொண்டு அதிரடியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் என் கருமுட்டையை உறைய வைத்துள்ளேன்" என்று அந்த நிகழ்ச்சியில் கூறிய கிரித்தி சனோன், இந்த முடிவு தனக்கு மிகப்பெரிய மனநிம்மதியை அளித்ததாகவும், வாழ்க்கையில் ஒரு பாரம் இறங்கிய உணர்வை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கான சரியான நேரம் வரும்போதுதான் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு குறித்து முடிவு எடுப்பேன் என்றும், அது ஒரு கடிகாரத்தின் அழுத்தத்திலோ அல்லது சமூகத்தின் கட்டாயத்திலோ இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகள் மீது தனக்கு மிகுந்த பாசம் உண்டு என்றாலும், திருமணம் அல்லது குழந்தைப்பேறுக்காக அவசரப்பட விரும்பவில்லை என்று கூறும் கிரித்தி, எதிர்காலத்தில் தான் முழுமையாகத் தயாராக இருக்கும் வேளையில் தாயாகும் வாய்ப்பைப் பாதுகாத்து வைத்திருக்கவே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கருமுட்டையை உறையவைக்கும் இந்தச் செயல்முறை அனைவருக்கும் சாத்தியமில்லாத ஒன்று என்பதையும், அதற்கான செலவு மற்றும் உடல் ரீதியான தயார்நிலை அவசியம் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது 35 வயதில் இந்த முடிவை எடுத்த கிரித்தி சனோன், 'மிமி' படத்திற்காக உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருந்த சமயத்தில், மிகவும் சரியான நேரத்தைத் தேர்ந்தெடுத்து இந்தச் சிகிச்சையை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.

கருமுட்டையை உறையவைக்கும் செயல்முறை உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஏற்கனவே எடை அதிகரிக்க வேண்டியிருந்த அந்த இரு மாத இடைவெளி இதற்கு ஏற்றதாக அமைந்தது. "இது உங்களுக்கு நீங்களே கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு" என்று தனக்கு அறிவுரை கூறியவர்களின் வார்த்தைகள் தனது மனதில் நீண்ட நாட்களாக இருந்ததாகவும், அதனால்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்தச் செயல்முறை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மிகவும் கடினமானது என்று ஒப்புக்கொள்ளும் கிரித்தி, ஹார்மோன் மாற்றங்களால் மனநிலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டதாகவும், கர்ப்பிணிப் பெண்ணைப் போன்ற உணர்வு தன்னை ஆட்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்த முடிவு தனக்கு எதிர்காலத்தில் ஒரு பாதுகாப்பு உணர்வை அளிப்பதாகவும், அதைச் செய்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முடிவு பயத்தினாலோ அல்லது கட்டாயத்தினாலோ எடுக்கப்பட்டதல்ல, மாறாக தனது வாழ்க்கைக்கு ஏற்ற நேரத்தில் குடும்பம் அமைக்க எடுத்த தனிப்பட்ட முடிவு என்றும், இப்போது தனது கவனம் முழுவதும் வாழ்க்கையையும் சினிமா பயணத்தையும் ரசிப்பதில் இருப்பதாகவும் கிரித்தி சனோன் தெரிவித்துள்ளார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT