நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேரை கைது செய்ய காவல்துறை அதிரடி... என்ன நடந்தது?

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசியதாக நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது சேலம் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாச உள்ளடக்கங்களை வெளியிட்டதாக புகார். கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேரை கைது செய்ய காவல்துறை அதிரடி... என்ன நடந்தது?
ADVERTISEMENT
ADVERTISEMENT

சமூக வலைத்தளங்களில் ஆபாசமான பேச்சு மற்றும் உள்ளடக்கங்களை வெளியிட்டதாக நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சேலத்தைச் சேர்ந்த வக்கீல் அஜித் என்பவர் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் சிலர், 18 வயதுக்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் மற்றும் அத்தகைய உள்ளடக்கங்களை பதிவிட்டு வெளியிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, சூரிய பிரபா, ஹனி சென்னை, அபிநயா சித்ரா, பிரியங்கா ராஜ், சரண்யா, சந்தோஷ் உள்பட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாக வந்து ஆபாசத்தைத் தூண்டும் வகையில் பேசுவதாகவும், இவர்கள் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும், இவர்களின் நடவடிக்கையால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது. எனவே, இவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வக்கீல் அஜித் தனது புகாரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் மற்றும் ஆபாச பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். .

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT