“மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் விஜய்” – நடிகை சங்கவி நம்பிக்கை

நடிகர் விஜய்யுடன் பல வெற்றி படங்களில் நடித்த நடிகை சங்கவி, விஜய் மக்கள் மனதில் இடம்பிடித்ததால்தான் இந்த உயரத்திற்கு வந்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

“மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் விஜய்” – நடிகை சங்கவி நம்பிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

சங்கவி நடிகர் விஜய் குறித்து பாராட்டாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் ரசிகர்கள் மிகவும் விரும்பிய ஜோடிகளில் ஒன்றாக விஜய்–சங்கவி ஜோடி பார்க்கப்பட்டது.

ரசிகன், விஷ்ணு உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்த இவர்களின் ஜோடி, அந்த காலகட்டத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்ததால் “லக்கி ஜோடி” என்ற பெயரையும் பெற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கர்நாடகாவைச் சேர்ந்த சங்கவி, அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் கமல் ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சங்கவிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜயின் அரசியல் பயணம் குறித்து பேசிய சங்கவி, “முதல்-அமைச்சராக இருக்கும் விஜய் நல்ல விஷயங்களையே செய்வார். எந்த முடிவையும் பலமுறை யோசித்துப் பிறகே எடுப்பவர். அதனால் சில நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மக்கள் நலனுக்கான நல்ல திட்டங்களை அவர் நிச்சயமாக கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், “சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விஜய்யை பிடிக்கும். மக்களின் இதயத்தில் இடம்பிடித்ததால்தான் அவர் இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். கண்டிப்பாக அவர் நல்லது செய்வார்,” என்றும் சங்கவி கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT