மெட்டாக்கு எதிராக 1.4 டிரில்லியன் டொலர் வழக்கு: இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் மாற்றங்கள் கோரப்படுகின்றன

2023ஆம் ஆண்டில் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் உட்பட 30 அமெரிக்க மாநிலங்களால் இந்த வழக்குத் தொடரப்பட்டது. மெட்டா நிறுவனம், குழந்தைகளின் கூட்டாட்சி மற்றும் மாநில தனியுரிமைச் சட்டங்களை மீறியதாக இந்த மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ளன. 

மெட்டாக்கு எதிராக 1.4 டிரில்லியன் டொலர் வழக்கு: இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் மாற்றங்கள் கோரப்படுகின்றன
ADVERTISEMENT
ADVERTISEMENT

மெட்டா நிறுவனம், அமெரிக்காவில் ஒரு பெரிய குழந்தை தனியுரிமை விசாரணையை (Child privacy trial) எதிர்கொள்கிறது.

இது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கின் மிகவும் பிரபலமான சில அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த கட்டாயப்படுத்தக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2023ஆம் ஆண்டில் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் உட்பட 30 அமெரிக்க மாநிலங்களால் இந்த வழக்குத் தொடரப்பட்டது. மெட்டா நிறுவனம், குழந்தைகளின் கூட்டாட்சி மற்றும் மாநில தனியுரிமைச் சட்டங்களை மீறியதாக இந்த மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ளன. 

பிபிசி (BBC) அறிக்கையின்படி, இந்த மாநிலங்கள் மெட்டாவிடமிருந்து $1 டிரில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டை கோருகின்றன.

இளம் பயனர்களின் பாதுகாப்புக்காகப் பின்வரும் மாற்றங்களைச் செய்ய மாநிலங்கள் வலியுறுத்துகின்றன:

ADVERTISEMENT
ADVERTISEMENT

- விருப்பங்களின் (Like counts) எண்ணிக்கையைத் திரையில் காட்டாமல் மறைத்தல்.

- இளம் பயனர்களுக்கான இன்ஃபினைட் ஸ்க்ரோலிங் (Infinite scrolling) முறையை நீக்குதல்.

- டீனேஜ் கணக்குகளுக்குப் பெற்றோரின் சரிபார்ப்பைக் (Parental verification) கொண்டு வருதல்.

- பரிந்துரை அல்காரிதம்களில் (Recommendation algorithms) மாற்றங்களைச் செய்தல்.

- தோற்றத்தை மாற்றும் இமேஜ் பில்டர்களுக்கு (Appearance-altering filters) கட்டுப்பாடு விதித்தல்.

- வீடியோக்கள் தானாக இயங்குவதை (Autoplay) நிறுத்துதல்.

- ஒரே பயனர் பல கணக்குகளை வைத்திருப்பதை கட்டுப்படுத்துதல்.

- இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் போன்ற மறைந்துவிடும் பதிவுகளை (Disappearing posts) நீக்குதல்.

பயனர்களைக் கூடுதலாக ஈடுபடுத்த வடிவமைக்கப்பட்ட அம்சங்கள், குழந்தைகளையும் பதின்ம வயதினரையும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடத் தூண்டுவதாகவும், இது தீங்கு விளைவிக்கும் சமூக ஒப்பீடு மற்றும் எதிர்மறை விளைவுகளுக்கு வழிவகுப்பதாகவும் மாநிலங்கள் வாதிடுகின்றன. 

இருப்பினும், மெட்டா இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. இளைஞர்களை ஆதரிப்பதில் தங்களுக்கு நீண்டகால அர்ப்பணிப்பு இருப்பதாக மெட்டா தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு, கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி இவோன் கோன்சலஸ் ரோஜர்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 30 மாநிலங்கள் அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 
எனவே, இந்த வழக்கின் முடிவு அமெரிக்கா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயன்படுத்தும் முறையில் அடிப்படை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

ஏற்கெனவே நியூ மெக்ஸிகோவில் நடந்த ஒரு தனி வழக்கில் மெட்டாவுக்கு $942 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மெட்டா மேல்முறையீடு செய்யவுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT