திடீரென முடங்கிய பேஸ்புக்: டெஸ்க்டாப் பயனர்கள் கடும் அவதி.. மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம்!

மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் சேவை இன்று மதியம் திடீரென முடங்கியது. மொபைல் பயனர்களுக்குப் பாதிப்பு இல்லாத நிலையில், டெஸ்க்டாப் பயனர்கள் லாக் அவுட் சிக்கலால் அவதிக்குள்ளாகினர்.
திடீரென முடங்கிய பேஸ்புக்: டெஸ்க்டாப் பயனர்கள் கடும் அவதி.. மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மெட்டா (Meta) நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக் (Facebook) சேவை, இன்று (19, 2026) மதியம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியதால் உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இலங்கை, இந்தியா உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 கோடி பேர் மெட்டாவின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்நிலையில், இன்று மதியம் டெஸ்க்டாப் (Desktop/System) வழியாகப் பேஸ்புக்கை அணுகிய பயனர்களுக்குச் சேவை முற்றிலும் முடங்கியது. கணக்குகள் தானாகவே லாக் அவுட் (Log out) ஆவது, புதிய பதிவுகளைப் பதிவிட முடியாமல் போவது மற்றும் கணினத் திரையில் 'ஏரர்' (Error) செய்தி தோன்றுவது போன்ற பல்வேறு சிக்கல்களைப் பயனர்கள் எதிர்கொண்டனர்.

இருப்பினும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு மொபைல் செயலியைப் (Mobile App) பயன்படுத்தும் பயனர்களைப் பாதிக்கவில்லை என்றும், கணினி மற்றும் மடிக்கணினிகளில் டெஸ்க்டாப் பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்தச் சிக்கல் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மெட்டா நிறுவனம் விளக்கம்: உலகளவில் பல லட்சம் பயனர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்துப் புகார் தெரிவித்து வந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. "பேஸ்புக்கின் முக்கியத் தகவல் மையங்களை (Data Centers) இணைப்பதில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தச் சேவை முடக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் இந்தச் சிக்கல் முழுமையாகச் சரிசெய்யப்படும். பயனர்களுக்கு ஏற்பட்ட இந்தத் தற்காலிகத் தடங்கலுக்கு ஆழமாக வருந்துகிறோம்" என்று மெட்டா நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர