குழந்தைகளை சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்கியதாக குற்றச்சாட்டு – $16.68 பில்லியன் அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!

இந்த உடன்படிக்கையின் கீழ், மெட்டா நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் குழந்தைகளுக்கான தினசரி பயன்பாட்டு வரம்புகளை (daily usage limits) விதிக்கும் மற்றும் இரவு நேரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும். 

குழந்தைகளை சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்கியதாக குற்றச்சாட்டு – $16.68 பில்லியன் அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (Meta Platforms) நிறுவனம், பேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலிகளில் பெரும் மாற்றங்களைச் செய்யவும், சுமார் $16.68 பில்லியன் வரை இழப்பீடு செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது. 

குழந்தைகளைத் தங்களது சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைத்தது, அவர்களின் பாதுகாப்பு குறித்து நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியது மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட தரவுகளை முறையற்ற முறையில் சேகரித்தது போன்ற குற்றச்சாட்டுகளைத் தீர்க்க இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்மூலம் 29 அமெரிக்க மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. மேலும், சமூக ஊடகங்கள் இளம் பயனர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் முக்கிய கூட்டாட்சி விசாரணை ஒன்றும் நிறைவடைந்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் கீழ், மெட்டா நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் குழந்தைகளுக்கான தினசரி பயன்பாட்டு வரம்புகளை (daily usage limits) விதிக்கும் மற்றும் இரவு நேரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும். 

அத்துடன், வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட உள்ளடக்கங்களை குழந்தைகள் அணுகுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அது வலுப்படுத்தும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

கலிபோர்னியாவின் மென்லோ பார்க்கை தளமாகக் கொண்ட மெட்டா நிறுவனம், இந்த உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டாலும், தங்களது தரப்பில் எந்தத் தவறும் இல்லை என்று மறுத்துள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா (Cambridge Analytica) ஊழல் தொடர்பாக கலிபோர்னியா, இலினாய்ஸ், நியூ மெக்சிகோ மற்றும் வாஷிங்டன் டி.சி. ஆகிய மாகாணங்கள் தொடர்ந்த தனியுரிமை வழக்குகளும் இதன்மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. இதற்கு இழப்பீடாக இந்த நான்கு மாகாணங்களும் இணைந்து $459.3 மில்லியனைப் பெறும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆரம்பகட்ட வர்த்தகத்தில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 2.3% உயர்ந்துள்ளன.

சமூக ஊடக நிறுவனங்கள் நாடு தழுவிய அளவில் இளைஞர்களின் மனநல நெருக்கடிக்குக் காரணமானதாகக் கூறி மாநிலங்கள், உள்ளூர் அரசாங்கங்கள், பள்ளி மாவட்டங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்ந்த பரந்தளவிலான வழக்குகளின் ஒரு பகுதியாகவே, இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் நடந்த கூட்டாட்சி விசாரணையில், கலிபோர்னியா, கொலராடோ, கென்டக்கி மற்றும் நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்கள் மெட்டா நிறுவனம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டின. 

மேலும், மெட்டா நிறுவனம், பெற்றோரின் அனுமதியின்றி குழந்தைகளின் தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்து, அவற்றை மெஷின் லேர்னிங் (Machine Learning) மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தியதன் மூலம் கூட்டாட்சித் தனியுரிமைச் சட்டத்தை (COPPA) மீறியதாக 29 மாநிலங்கள் குற்றம் சாட்டியிருந்தன.

இருப்பினும், "சமூக ஊடக அடிமைத்தனம்" என்பது மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனநலப் பாதிப்பு அல்ல என்பதால், தாங்கள் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தவில்லை என்று மெட்டா வாதிட்டுள்ளது. 

ஓகஸ்ட் 18ஆம் திகதியன்று விசாரணை தொடங்குவதற்கு முன்பு, இந்த நான்கு மாநிலங்களும் தங்களுக்கு $1.4 டிரில்லியன் வரை அபராதம் விதிக்கக் கோரியதாக மெட்டா கூறியது. ஆனால், மாநிலங்கள் இந்தத் தொகை சுமார் $200 பில்லியன் வரை இருக்கும் என்று தெரிவித்தன.

தற்போதும் மெட்டா, ஸ்னாப் (Snap), கூகுளின் ஆல்பாபெட் (Alphabet - YouTube) மற்றும் பைட்டான்ஸ் (ByteDance - TikTok) ஆகிய நிறுவனங்கள், குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் தங்களது தளங்களை வடிவமைத்ததாகக் கூறி நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றன. 

இந்த கூட்டாட்சி வழக்குகள் அனைத்தும் ஓக்லாந்தில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி யுவோன் கோன்சலஸ் ரோஜர்ஸ் (Yvonne Gonzalez Rogers) முன்னிலையில் ஒருங்கிணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT