நிலவுக்கு மனிதரை அனுப்பும் நாசா திட்டம் ஒத்திவைப்பு: வானிலை காரணமாக தாமதம்

வானிலை நிலைமை மேம்படும் பட்சத்தில், வரும் திங்கட்கிழமை விண்வெளிப் பயணத்திற்கு முன்பான ஆடை ஒத்திகைகள் (dress rehearsal) மேற்கொள்ளப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

நிலவுக்கு மனிதரை அனுப்பும் நாசா திட்டம் ஒத்திவைப்பு: வானிலை காரணமாக தாமதம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் NASA-வின் முக்கிய விண்வெளி திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடும் குளிர்ச்சியும் சீரற்ற வானிலையும் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Artemis Program (ஆர்ட்டெமிஸ் மூன்ஷாட்) திட்டம், பிப்ரவரி 6ஆம் திகதிக்கு முன்னதாக செயற்படுத்தப்படவிருந்தது. ஆனால் தற்போது அந்த திட்டம் குறைந்தது இரண்டு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த பயணத்திற்கான முக்கிய கட்டமாகக் கருதப்படும் ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் சோதனை சனிக்கிழமை நடைபெறவிருந்தது. ஆனால் வானிலை சாதகமாக இல்லாத காரணத்தால் அந்த சோதனையும் இடைநிறுத்தப்பட்டது.

வானிலை நிலைமை மேம்படும் பட்சத்தில், வரும் திங்கட்கிழமை விண்வெளிப் பயணத்திற்கு முன்பான ஆடை ஒத்திகைகள் (dress rehearsal) மேற்கொள்ளப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த விண்வெளிப் பயணத்தின் கமாண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ள Reid Wiseman மற்றும் அவரது குழுவினர், தற்போது Houston நகரில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT