இந்தியாவில் எக்ஸ் (X) தளத்திற்குப் புதிய கட்டுப்பாடு: ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் (X) தளத்தில், இந்தியப் பயனர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் எக்ஸ் (X) தளத்திற்குப் புதிய கட்டுப்பாடு: ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் (X) தளத்தில், இந்தியப் பயனர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எலான் மஸ்க் தலைமையிலான இந்தத் தளம், உலகளவில் 586 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 30 மில்லியன் பேர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எக்ஸ் தளத்தில் ஆபாச உள்ளடக்கங்கள் தாராளமாக வலம் வருவதைத் தடுக்க வேண்டும் எனப் பயனர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு மட்டும் பிரத்யேகமாக இந்தத் தடையை அமல்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்துப் பயனர்கள் 'க்ரோக்' (Grok) ஏ.ஐ-யிடம் கேட்டபோது, இந்திய அரசின் விதிகளைப் பின்பற்றி இனி இத்தகைய ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பயனர்களுக்குக் காட்டப்படாது என அது பதில் அளித்துள்ளதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த அதிரடி மாற்றமானது பாதுகாப்பான இணையப் பயன்பாட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT