WhatsApp, Instagram, Facebook: கட்டண அம்சங்களை அறிமுகப்படுத்தும் Meta

இருப்பினும், அடிப்படை சேவைகள் தொடர்ந்து இலவசமாகவே செயல்படும் என Meta நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெளிவுபடுத்தியுள்ளது.

ஜனவரி 27, 2026 - 21:13
WhatsApp, Instagram, Facebook: கட்டண அம்சங்களை அறிமுகப்படுத்தும் Meta

WhatsApp பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது சமூக ஊடகங்களில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. WhatsApp, Instagram, Facebook போன்ற சேவைகளுக்கான சில கூடுதல் அம்சங்களை எதிர்வரும் மாதங்களில் கட்டண முறையில் வழங்க Meta நிறுவனம் முன்னோட்டச் சோதனைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.

கட்டணம் செலுத்தும் பயனீட்டாளர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகள் உட்பட மேம்பட்ட வசதிகளை பயன்படுத்த முடியும். இருப்பினும், அடிப்படை சேவைகள் தொடர்ந்து இலவசமாகவே செயல்படும் என Meta நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெளிவுபடுத்தியுள்ளது.

புதிய அம்சங்களில் ‘Vibes’ எனும் வீடியோ உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு செயலியும் இடம்பெறுகிறது. இதற்குடன், சவால்மிக்க பணிகளை எளிதாகத் திட்டமிட்டு நிறைவேற்ற உதவும் சீனாவின் ஒரு செயலியையும் தனது சமூக ஊடக தளங்களுடன் இணைக்க Meta திட்டமிட்டுள்ளது. இதற்காக Manus எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் சிங்கப்பூரை தளமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பு, Meta-வின் சொந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த உதவும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, CHATBOT எனும் அம்சத்தின் பயன்பாட்டில் தாங்கள் பிற நிறுவனங்களைவிட வேறுபட்ட அணுகுமுறையை கொண்டுள்ளதாக Manus நிறுவனம் கூறுகிறது. குறிப்பிட்ட உத்தரவுகளை வழங்குவதன் மூலம் பயனீட்டாளருக்குத் தேவையான பதில்களை விரைவாகப் பெற முடியும் என்றும் அது உறுதியளித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!