முடிவுக்கு வந்தது இந்தியாவின் 'கூ' செயலி; என்ன காரணம்?

மத்திய அரசின் பல அமைச்சர்கள் மற்றும் துறைகள் கூ சமூக வலைதளத்திற்கு மாறி கணக்கு தொடங்கின. 

ஜுலை 4, 2024 - 16:56
முடிவுக்கு வந்தது இந்தியாவின் 'கூ' செயலி; என்ன காரணம்?

2021 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் மற்றும் ட்விட்டர் (இப்போது X) உடனான மோதலின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்விட்டர் போன்று அதே அம்சங்களைக் கொண்ட கூ  பிரபலமடைந்தது.

மத்திய அரசின் பல அமைச்சர்கள் மற்றும் துறைகள் கூ சமூக வலைதளத்திற்கு மாறி கணக்கு தொடங்கின. 

கூ நிறுவனத்தின் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா LinkedIn பதிவில்,  "பல பெரிய இணைய நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுடன் கைகோர்க்க முயற்சி செய்தோம். 

ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் பலனைத் தரவில்லை. சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வரை சென்று பின்பு அது  மாறிவிட்டது" என்று கூறினார் 

கூ மற்றும் டெய்லிஹன்ட் இடையேயான ஒப்பந்தம் தோல்வியடைந்ததாக தி மார்னிங் கான்டெக்ஸ்ட்ஸ் அறிக்கை கூறியதை அடுத்து இந்த அப்டேட் வந்தது. 

இந்த செயலி பிரேசிலில் அதன் இருப்பை விரிவுபடுத்தியது மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட 48 மணிநேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோடுகளைப் பெற்றது ஆனால், இது இந்திய சந்தையில் பயனர்களைத் தக்க வைக்க போராடியது. 

கூ செயலி டிவிட்டர் போன்ற அதே அம்சங்களை கொண்டுள்ளது. ஹேஷ்டேக் பயன்படுத்துவது, போஸ்ட் பதிவிடுவது, ஃபாலோவர்ஸ் என அதே மாதிரியான அம்சங்களை ஒத்திருக்கிறது.  

மேலும் "Talk to Type" போன்ற புதிய அம்சங்களையும் செயலி அறிமுகப்படுத்தியது. இந்தி, தெலுங்கு, தமிழ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, அஸ்ஸாமி மற்றும் பஞ்சாபி போன்ற பல்வேறு இந்திய மொழிகளிலும் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.  

இருப்பினும் நிறுவனத்தின் பொருளாதாரம் மேம்படவில்லை என்று கூறப்பட்டது. பியூஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத், எழுத்தாளர் அமிஷ் திரிபாதி, கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் போன்ற பல முக்கிய இந்திய பிரபரங்கள் கூ- செயலியில் முதலில் கணக்குத் தொடங்கின. 

மேலும், பிரேசிலிய பிரபலங்கள் பாபு சந்தனா, கிளாடியா லெய்ட் மற்றும் எழுத்தாளர் ரோசானா ஹெர்மன் போன்றவர்களும் இதில் இணைந்தனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!