மலையகம்

கண்டி – கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு வர்த்தக பெறுமதி இல்லை

லெப்ரடோரைட் கனியம் ஒரு வகையான அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் பாறையாக வகைப்படுத்தப்படுவதாகவும், இருப்பினும் குறித்த பாறை வணிக ரீதியாக உயர்ந்த பெறுமதி கொண்டதாக இல்லை என்றும் அந்த அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய நபர் கைது

11 முதல் 14 வயதுக்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களிடம் சந்தேகநபர் ஆபாச வீடியோக்களை காட்டியதாக, நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களின் கொடுப்பனவை வங்கி கணக்குக்கு வரவு வைக்க அரசாங்கம் அதிரடி தீர்மானம்

தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் முக்கியமான நிவாரணங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் - மூன்று இளைஞர்கள் கைது

மாணவி, தனது பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வருவதாகவும், கடந்த 17ஆம் திகதி காலை வீட்டைவிட்டு வெளியேறி இரவு தாமதமாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பாட்டி, கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லொறி – வேன் மோதல்; இருவர் படுகாயம்

விபத்தில் லொறியும் வேனும் கடுமையாக சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா கிரகரி வாவியில் விழுந்து விமானம் விபத்து 

நுவரெலியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தேநீர் இடைவேளையில் விபத்து: லொறி மோதி 21 வயது இளைஞன் உயிரிழப்பு

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மற்றைய நபர், முன்னதாக கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

18 நாட்களுக்குப் பின் நாவலப்பிட்டி-கண்டி வீதி மீண்டும் திறக்கப்பட்டது

அந்த இடத்தில் பணிகள் முழுமையாக முடியும் வரை வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வெவண்டன் எஸ்டேட் மக்கள்

அண்மைய அனர்த்தத்தில் மலையக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பாராமுகமாக செயற்பட்டு வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

ஒன்பது வளைவு பாலத்திற்கு மின் விளக்கு அமைக்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

தெமோதரை ஒன்பது வளைவு பாலத்தில்  நடைபெற இருந்த மின் விளக்கு திறப்பு விழா காலவரையற்ற முறையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாயாக அதிகரிப்பு

பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

கழிப்பறை குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் பலி

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு கழிப்பறை ஒன்றை கட்டுவதற்காக அவரது தந்தையால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.

ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த மாணவனை தேடும் பணி தீவிரம்

ஆறு பாடசாலை மாணவர்கள், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர். 

Breaking News: பதுளை பேருந்து விபத்தில் மூவர் பலி; 26 பேர் காயம்

பதுளை - துன்ஹிந்தவில் இரண்டு வளைவுகளுக்கு இடையிலான பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவில் காட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம்

இருவரும் கடந்த 11ஆம் திகதி காட்டுக்குச் சென்றுள்ளதுடன், இருவரும் அன்றைய தினம் மீண்டும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தனர். 

பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழா

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.