2026-ல் நடக்கும் முதல் சூரிய பெயர்ச்சி: பண மெத்தையில் உறங்கப்போகும் இந்த 7 ராசிகள்

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி ஜனவரி 15ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றுதான் சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த பெயர்ச்சி ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஜனவரி 17, 2026 - 07:21
2026-ல் நடக்கும் முதல் சூரிய பெயர்ச்சி: பண மெத்தையில் உறங்கப்போகும் இந்த 7 ராசிகள்

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி ஜனவரி 15ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றுதான் சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த பெயர்ச்சி ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம், சூரியன் கிரகங்களின் ராஜாவாக விளங்குபவர் என்பதுடன், அவர் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒருமுறை ராசியை மாற்றும் போது அனைவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்கிறது. சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் போதே தமிழ் மாதங்கள் தொடங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் அபரிமிதமான அதிர்ஷ்டத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் தரப்போகிறது. குறிப்பாக பணம், தொழில், பதவி, சமூக மரியாதை ஆகியவற்றில் பெரிய முன்னேற்றம் காணும் ஏழு ராசிகள் குறித்து ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி தொழில் ஸ்தானத்தில் நடைபெறுவதால், பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரலாம். தந்தை வழி அல்லது பூர்வீக சொத்துகள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. திடீர் பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், நீண்ட காலமாக தடைபட்டு இருந்த அதிர்ஷ்டம் இப்போது விழித்தெழும். நீண்ட தூர பயணங்கள் வெற்றிகரமாக அமையும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்கல்வி அல்லது வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சிறப்பு பலன்களை அளிக்கும். சூரியன் அவர்களின் அதிபதி என்பதால், எதிரிகளை வெல்லும் சக்தி அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைக்கப்பட்டு மன நிம்மதி கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடிவடையலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பும் அதிகம்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி தைரியம் மற்றும் முயற்சியை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். உடன்பிறந்தவர்களின், குறிப்பாக இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மார்க்கெட்டிங், மீடியா, எழுத்து மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த காலம் மிகுந்த முன்னேற்றத்தைத் தரும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை கணிசமாக மேம்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட கால நிதி சிக்கல்களிலிருந்து விடுபடும் சூழல் உருவாகும். சேமிப்பு அதிகரித்து, பழைய கடன்களை அடைக்க முடியும். குழந்தை வரன் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு சூரியன் லக்ன ஸ்தானத்தில் அமர்வதால், ஆளுமைத் திறன் மற்றும் தலைமைப் பண்புகள் வெளிப்படும். அரசு தொடர்பான காரியங்கள் தடையின்றி நிறைவேறும். வேலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற வாய்ப்புகள் உருவாகலாம். தொழில் செய்பவர்களுக்கு வருமானம் பெருகும். ஆரோக்கியமும் மேம்படும்.

மீன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி லாப ஸ்தானத்தில் நடைபெறுவதால், நிதி நிலை மிகுந்த வலுப்படும். பல்வேறு வழிகளில் வருமானம் கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபம் வரலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் சூழல் உருவாகும்.

மொத்தத்தில், 2026ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பணம், பதவி மற்றும் வாழ்வாதாரத்தில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தப்போகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!