இலங்கையில் அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு: மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளின் இன்றைய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள புதிய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இலங்கையில் அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு: மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளின் இன்றைய மாற்று விகிதங்கள்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள புதிய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 305.61 ஆகவும், விற்பனை விலை ரூ. 313.14 ஆகவும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி வணிக வங்கிகளில் இன்றைய டொலர் நிலவரத்தைக் கவனிக்கையில், இலங்கை வங்கியில் கொள்முதல் விலை ரூ. 305.85 ஆகவும் விற்பனை விலை ரூ. 312.85 ஆகவும் காணப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மக்கள் வங்கியில் முறையே ரூ. 305.89 மற்றும் ரூ. 312.63 ஆகவும், கொமர்ஷல் வங்கியில் ரூ. 304.11 மற்றும் ரூ. 312.50 ஆகவும் பதிவாகியுள்ளது. அதேபோல், சம்பத் வங்கியில் டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 306.01 ஆகவும் விற்பனை விலை ரூ. 312.06 ஆகவும் உள்ள நிலையில், அமானா வங்கியில் ரூ. 307.45 மற்றும் ரூ. 311.45 என்ற அளவில் இன்றைய வர்த்தகம் முன்னெடுக்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT