லிட்ரோ கேஸ் விற்பனை முகவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் அனைத்து லிட்ரோ விநியோகஸ்தர்களுக்கும் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லிட்ரோ கேஸ் விற்பனை முகவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் அனைத்து லிட்ரோ விநியோகஸ்தர்களுக்கும் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அனைத்து லிட்ரோ விநியோகஸ்தர்களும் எரிவாயுவைப் பதுக்கி வைப்பது, விற்பனையைக் கட்டுப்படுத்துவது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறுவது அல்லது அங்கீகரிக்கப்படாத கூடுதல் கட்டணங்களை வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் புறக்கணிக்கும் அல்லது மீறும் விநியோகஸ்தர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால், அவர்களின் லிட்ரோ விநியோகஸ்தர் முகவர் அந்தஸ்து முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தெரிவிக்கிறது.

நுகர்வோருக்கு லிட்ரோ எரிவாயு நிர்ணயிக்கப்பட்ட விலையில் தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT