இலங்கையில் மீண்டும் உயர்ந்த தங்க விலை: இன்று மாலை வெளியான புதிய விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.3,000 அதிகரித்து ரூ.382,000 ஆக உயர்ந்துள்ளதாக புதிய விலை நிலவரம் தெரிவிக்கிறது.

இலங்கையில் மீண்டும் உயர்ந்த தங்க விலை: இன்று மாலை வெளியான புதிய விலை நிலவரம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் உள்நாட்டு சந்தையில் இன்று (30) காலை பதிவான விலையுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய விலைத் திருத்தத்தின்படி, இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.379,000 ஆக விற்பனையான நிலையில், தற்போது ரூ.3,000 அதிகரித்து ரூ.382,000 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.382,000 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.351,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் 24 கரட் தங்கத்தின் விலை ரூ.47,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், 22 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ.43,938 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தால் உள்நாட்டு தங்க விலையிலும் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT