ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாரா? ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட விளக்கம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திடீர் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், அவை முற்றிலும் தவறானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு எந்தவிதமான உண்மையான அடிப்படையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர், அவற்றின் உண்மைத்தன்மையை உத்தியோகபூர்வ தகவல் மூலங்களின் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகும் அனைத்து தகவல்களும் உண்மையானவை அல்ல என்பதால், உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.