அரசாங்கம் பணத்தை அச்சிடுகிறதா, பணவீக்கம் எவ்வாறு அதிகரித்தது? - ரவி கேள்வி
பணத்தை அச்சிடும் நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை என்றால், பணவீக்க விகிதம் எவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறித்து அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது, "கடந்த அரசாங்கங்கள் பணத்தை அச்சிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டன. அப்படியிருக்க, இப்போது பணம் அச்சிடப்படவில்லை என்றால், பணவீக்க விகிதம் எப்படி உயர்கிறது என்பது புரியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய வங்கி துல்லியமான கணிப்புகளை மேற்கொண்டு, பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.