கட்டுநாயக்கவில் 60 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத பொருட்களுடன் சந்தேகநபர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள், விதைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) அதிகாலை கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு வலய (BOI) சமிக்ஞை விளக்குச் சந்திக்கு அருகில், நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொருட்களைக் காரொன்றில் கடத்திச் சென்ற போது, காரும் சாரதியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு விமான நிலையப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெரியமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையப் பொலிஸாரினால் கட்டுநாயக்க சுங்கத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.