வெலிக்கடை சிறையில் 3 மாத சிசு உயிரிழப்பு! விரிவான அறிக்கை கோரிய அமைச்சர்!
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் மூன்று மாத சிசு, தாய்ப்பால் தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக விரிவான அறிக்கையொன்றைக் கோருவதற்குப் பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பில் அவசியமான தலையீடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை பெண்கள் பணியகத்துக்கும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்துக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகள் மற்றும் அநாதை நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.