கொழும்பு வெள்ளம்: போலி AI வீடியோக்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை; மேயர் எச்சரிக்கை

கொழும்பிலுள்ள ஒன் கோல் ஃபேஸ் வர்த்தகத் தொகுதியில் வெள்ளம் ஏற்பட்டதாகப் பரவும் AI போலி காணொளிகளைத் தயாரித்துப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் வ்ராய் கெலி பல்தசார் எச்சரித்துள்ளார்.

கொழும்பு வெள்ளம்: போலி AI வீடியோக்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை; மேயர் எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பில் ஏற்பட்ட வெள்ள நிலைமை தொடர்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களைத் தயாரித்துப் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபை மேயர் வ்ராய் கெலி பல்தசார் எச்சரித்துள்ளார்.

அண்மையில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள 'ஒன் கோல் ஃபேஸ்' (One Galle Face) வர்த்தகத் தொகுதிக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகக் காட்டும் பல AI வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக மேயர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, ஒன் கோல் ஃபேஸ் வர்த்தகத் தொகுதிக்குள் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது அல்லது திரிபுபடுத்தப்பட்டது என்பதை 'ஃபேக்ட் கிரெசென்டோ இலங்கை' (Fact Crescendo SriLanka) எனும் உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய திகதிகளில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து பேஸ்புக் மற்றும் டிக்டொக் தளங்களில் பரவிய 14 செக்கன் கொண்ட குறித்த வீடியோவில், வர்த்தகத் தொகுதியின் நுழைவாயிலுக்கு அருகில் வெள்ளநீர் தேங்கியிருப்பதும், நகரும் படிக்கட்டு மற்றும் 'அண்டர் ஆர்மர்' (Under Armour) விற்பனை நிலையத்திற்கு அருகில் மக்கள் நீரில் நடந்து செல்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

குறித்த வீடியோவை ஆய்வு செய்ததில், சிதைந்த முக அமைப்புகள், வழக்கத்துக்கு மாறான எழுத்துக்கள் மற்றும் இயற்கைக்கு முரணான நீரின் அசைவுகள் என AI தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றம் செய்யப்பட்டதற்கான பல அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக ஃபேக்ட் கிரெசென்டோ தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஒன் கோல் ஃபேஸ் வர்த்தகத் தொகுதிக்குள் உள்ள பல கடைகளின் ஊழியர்களைத் தொடர்புகொண்டு வினவியபோது, வர்த்தகத் தொகுதிக்குள் வெள்ளநீர் புகவில்லை எனவும் நீர் தேங்கவில்லை எனவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வாகனத் தரிப்பிடப் பகுதியில் சிறிதளவு நீர் காணப்பட்டபோதிலும், வைரலான வீடியோவில் காட்டப்பட்டதைப் போன்று நிலைமை மோசமாக இருக்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

காலி முகத்திடலைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட கொழும்பின் பல வீதிகளில் உண்மையான வெள்ள நிலைமை பதிவாகியிருந்தபோதிலும், ஒன் கோல் ஃபேஸ் வர்த்தகத் தொகுதி வெள்ளத்தில் மூழ்கியதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் போலியானது என குறித்த உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நவம்பர் 6ஆம் திகதி சில மணி நேரங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானதைத் தொடர்ந்து கொழும்பில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், நவம்பர் 11ஆம் திகதி பெய்த மழையினாலும் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT