ரூ.23 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் தமிழக வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக 23 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களைக் கடத்தி வந்த தமிழக வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.23 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் தமிழக வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

சுமார் 23 கோடியே 14 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து புறப்பட்ட பாடிக் எயார் விமான சேவைக்குச் சொந்தமான ஓ.டி.- 297 ரக விமானத்தின் மூலம், நேற்று (11) நள்ளிரவு 12 மணியளவில் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பையை சோதனையிட்டபோது, புளி மிட்டாய்கள் அடங்கிய நான்கு தகரப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோகிராம் 102 கிராம் குஷ் போதைப்பொருளும், மிட்டாய்கள் போன்று தயாரிக்கப்பட்டு, ஆறு பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் 260 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காக அவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT