சொகுசு கார் கொள்வனவு மற்றும் தவணைக்கான பணம் எங்கிருந்து வந்தது? பெண் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்
சொகுசு கார் ஒன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கான தவணைக்கட்டணங்களைச் செலுத்துவதற்குப் பணம் திரட்டப்பட்ட விதத்தை உறுதிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய இவரது நவீன ரக கார் ஒன்றும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரால், குறித்த காரின் லீசிங் தவணைக் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டதை அடுத்தே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.