காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க: குடல் ஆரோக்கியத்திற்கு டாக்டர் எச்சரிக்கை

எனவேதான் சரியான காலை உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியம் என்று நினைத்துக் காலையில் சாப்பிடும் சில உணவுகள், உடலுக்கு நன்மை விளைவிப்பதற்குப் பதிலாகத் தீங்கை விளைவிக்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க: குடல் ஆரோக்கியத்திற்கு டாக்டர் எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, நம்மில் பலர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொண்டு வருகிறார்கள். ஏனெனில் காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் உணவுகள் உடலால் அப்படியே உறிஞ்சிக் கொள்ளப்பட்டு, அதன் தாக்கம் அன்றைய தினத்தில் நன்கு தெரியும். 

எனவேதான் சரியான காலை உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியம் என்று நினைத்துக் காலையில் சாப்பிடும் சில உணவுகள், உடலுக்கு நன்மை விளைவிப்பதற்குப் பதிலாகத் தீங்கை விளைவிக்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பத்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த இரைப்பை மற்றும் கல்லீரல் நிபுணரான டாக்டர் ஷுபம் வத்ஸ்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத முக்கியமான மூன்று உணவுகளைப் பகிர்ந்துள்ளார். இந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கை விளைவிக்கக்கூடும் என்பதால் அவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: "உங்கள் காலை உணவுதான் அன்றைய நாள் முழுவதும் உங்கள் குடல் எப்படி உணரும் என்பதைத் தீர்மானிக்கிறது. எனவே இந்த மூன்று உணவுப் பொருட்களையும் ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள், ஏனெனில் இது உங்கள் குடல் ஆரோக்கியம் சீர்குலைவதற்கு வழிவகுக்கும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முதலாவதாக, சிட்ரஸ் பழங்கள் மற்றும் எலுமிச்சை ஜூஸ். சிட்ரஸ் பழங்கள் மற்றும் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலத்தன்மை அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் எடுக்கும்போது அவை குடல் சுவற்றினை எரிச்சலூட்டும். வயிறு காலியாக இருக்கும்போது இந்தச் சிட்ரஸ் அல்லது எலுமிச்சை ஆரஞ்சு போன்ற புளிப்புச் சுவையுடைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றில் உள்ள அமிலத்தன்மை குடல் சுவற்றினை நேரடியாக எரிச்சலூட்டி அசிடிட்டிக்கு வழிவகுத்துவிடும்.

இரண்டாவதாக, ப்ளாக் காபி. பொதுவாகக் காபி உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது, ஆனால் வெறும் வயிற்றில் ஒரு கப் ப்ளாக் காபியைக் குடிப்பது குடலுக்கு ஏற்படும் ஒரு அமில அதிர்ச்சியைப் போன்றது. இது அமில உற்பத்தியைத் தூண்டி வயிறு உப்புசம், எரிச்சல் மற்றும் ஆற்றல் இழப்பை ஏற்படுத்துவதாக டாக்டர் கூறியுள்ளார். எனவே இதுவரை வெறும் வயிற்றில் ப்ளாக் காபி குடித்து வந்தால், இனிமேல் அந்தத் தவறைச் செய்யக்கூடாது.

மூன்றாவதாக, காரமான உணவுகள். காரமான உணவுகள் வயிற்றில் எரிச்சலையும் நீண்ட கால அழற்சியையும் ஏற்படுத்தும், எனவே காலையில் வெறும் வயிற்றில் காரசாரமான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு இரைப்பை குடல் மருத்துவர் கூறியுள்ளார். இதுவரை காலையில் கார சட்னி செய்து இட்லி, தோசைக்குச் சாப்பிட்டு வந்திருந்தால், இனிமேல் அந்தத் தவறைச் செய்யக்கூடாது.

குடலைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால், எப்போதும் காலை உணவை ஏதேனும் ஒரு நடுநிலையான உணவோடு தொடங்குமாறு டாக்டர் பரிந்துரைத்துள்ளார்.

குடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகளாக ஊற வைத்த நட்ஸ், ஓட்ஸ், வாழைப்பழம், பிரட் ஆம்லெட், இட்லி சாம்பார், தோசை சாம்பார், ஆப்பிள் மற்றும் வேக வைத்த முட்டைகள் ஆகியவற்றை அவர் பரிந்துரைத்துள்ளார். இப்படியான உணவுகளைக் காலை உணவின் போது எடுத்து வந்தால், குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும், உடலும் எவ்விதப் பிரச்சனைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT