உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் 5 தவறுகள்: செரிமானத்தை பாதிக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா?

உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் 5 தவறுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது, காபி டீ குடிப்பது, பழம் சாப்பிடுவது, உடனே தூங்குவது, அதிக நீர் அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்வது ஆகிய பழக்கங்கள் செரிமானத்தை பாதிக்கின்றன.

உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் 5 தவறுகள்: செரிமானத்தை பாதிக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா?
ADVERTISEMENT
ADVERTISEMENT

உணவுதான் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது, எனவே ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற உட்கொள்ளும் மூன்று வேளை உணவுகளும் ஆரோக்கியமானதாகவும் சமச்சீரானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். நல்ல ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும்போது உடலுறுப்புக்களின் செயல்பாடு, இரத்த ஓட்டம் போன்றவை சீராக இருக்கும். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் மட்டும் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கை வகிப்பதில்லை, உணவு உண்ட பின் மேற்கொள்ளும் செயல்களும் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

உணவு உண்ட பின் ஒருசில செயல்களை மேற்கொண்டால், அது பலவிதமான ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது தெரியாமல் நிறைய பேர் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று கருதி உணவுக்குப் பின் ஒருசில பழக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான பழக்கங்கள் செரிமானத்தைச் சீராக்குவதற்குப் பதிலாக ஆரோக்கியத்தைத்தான் சீர்குலைக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முதலாவதாக, உணவு உண்டதும் காபி அல்லது டீ குடிப்பது. நிறைய பேர் உணவு உண்ட பின் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர், ஆனால் சாப்பிட்டதும் காபி அல்லது டீயைக் குடித்தால் அது செரிமானத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது. இவற்றில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதைக் குறைக்கின்றன, மேலும் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதன் விளைவாக வயிற்று உப்புசத்தை உண்டாக்குவதோடு செரிமான செயல்பாட்டைக் குறைக்கலாம். எனவே உணவுக்குப் பின் காபி அல்லது டீ குடிக்க நினைத்தால், குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து அருந்துங்கள்.

இரண்டாவதாக, சாப்பிட்டதும் பழங்களை உண்பது. உணவு உண்ட பின் சிலருக்குப் பழங்களைச் சாப்பிடும் பழக்கம் இருக்கும். பழங்கள் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருந்தாலும், அவற்றை உணவு உண்ட பின் சாப்பிடுவது நல்லதல்ல, ஏனெனில் அது நொதித்தலை ஏற்படுத்தி வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை போன்றவற்றிற்கு வழிவகுக்கும். பழங்கள் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், உணவுக்குக் குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்போ அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகோ வெறும் வயிற்றில் சாப்பிடுவதே சிறந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மூன்றாவதாக, சாப்பிட்ட உடனே தூங்குவது அல்லது படுப்பது. உணவு உண்ட உடனேயே படுத்தால், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் உணவுக்குழாய் வழியாக மேலே ஏறக்கூடும். இதன் விளைவாக நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றால் சிரமப்படுவதற்கான வாய்ப்புள்ளது. எப்போதும் தூங்குவதாக இருந்தால், உணவு உண்ட பின் இரண்டு மணி நேரம் கழித்துத் தூங்க வேண்டும்.

நான்காவதாக, அதிகளவு நீரை அருந்துவது. தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது தான், ஆனால் அந்த நீரை எப்போதெல்லாம் குடிக்கிறோம் என்பதும் மிகவும் முக்கியம். உணவு உண்டதுமே அதிகளவு நீரைக் குடித்தால், அது வயிற்று அமிலங்களையும் செரிமான நொதிகளையும் நீர்த்துப்போகச் செய்து, உணவைச் செரிக்கும் செயல்முறையை மெதுவாக்கும். இதன் விளைவாக வயிறு கனமாகவும், செரிமானப் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். தண்ணீர் குடிக்க நினைத்தால், முப்பது நிமிடம் கழித்துக் குடிப்பது நல்லது.

ஐந்தாவதாக, உணவு உண்டதும் உடற்பயிற்சி செய்வது. உடற்பயிற்சி செய்வது நல்லது என்றாலும், அந்த உடற்பயிற்சியைச் செய்வதற்கும் நேரம் காலம் உண்டு. முக்கியமாக உடற்பயிற்சியை உணவு உண்ட பின் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாகத் தீவிரமான உடற்பயிற்சிகளை உணவுக்குப் பின் செய்தால், அது செரிமான மண்டலத்தில் சிரமத்தை ஏற்படுத்தும், மேலும் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி, தசைப்பிடிப்பு அல்லது குமட்டலுக்கு வழிவகுக்கும். உணவு உண்ட பின் மெதுவாக நடக்கலாம், ஆனால் தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்வதாக இருந்தால், குறைந்தது ஒரு மணி நேரம் கழித்துச் செய்யலாம்.

எனவே உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது மட்டுமின்றி, உணவுக்குப் பிறகான உங்கள் பழக்கங்களிலும் சிறப்புக் கவனத்தைச் செலுத்துங்கள்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT