ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பில் நடந்த போராட்டம் முடிவு! பின்னணி என்ன?

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பில் நடந்த போராட்டம் முடிவு! பின்னணி என்ன?
ADVERTISEMENT
ADVERTISEMENT

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு - விகாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க பிக்குகள் வழங்கிய எழுத்துமூல ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக உலப்பனை சுமங்கல தேரர் இன்று (25) தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஞானசார தேரரின் விடுதலை விவகாரம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் உரிய தலையீடுகளை மேற்கொள்வார்கள் என வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே, தாம் முன்னெடுத்து வந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்த பௌத்த பிக்குகள் விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து வெளியேறி வருகின்றனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT