கொழும்பில் டிசம்பர் 1 முதல் CM06 சுற்றுவட்ட பேருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் CM06 கொள்ளுப்பிட்டி சுற்றுவட்ட பேருந்து சேவை எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

கொழும்பில் டிசம்பர் 1 முதல் CM06 சுற்றுவட்ட பேருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் CM06 கொள்ளுப்பிட்டி சுற்றுவட்ட பேருந்து சேவையை எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தவுள்ளதாக லங்கா மெட்ரோ டிரான்சிட் (LMT) நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் குறித்த பேருந்து சேவை தற்காலிகமாக முன்னெடுக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தத் தீர்மானத்தினால் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பிலும் நிறுவனம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

எனினும், CM06 கொள்ளுப்பிட்டி சுற்றுவட்ட பேருந்து சேவையை இடைநிறுத்துவதற்கான காரணம் தொடர்பில் நிறுவனம் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.

அத்துடன், குறித்த பேருந்து சேவை மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது தொடர்பிலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT