2027 வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை
2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (20) மாலை 6.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய, நவம்பர் 13 ஆம் திகதி முதல் இன்று வரை 7 நாட்கள் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நாளை (21) முதல் எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
அரச விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த சனிக்கிழமை உட்பட ஏனைய அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணிக்கு வரவு செலவுத் திட்ட விவாதத்திற்காகப் பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.