இணையவழி மோசடி மையங்களை முறியடிக்க இலங்கை அதிகாரிகளுடன் கைகோர்க்கும் அமெரிக்காவின் FBI குழு

இலங்கையில் இயங்கும் இணையவழி மோசடி மையங்கள் தொடர்பான விசாரணைகளில் இலங்கை சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அமெரிக்காவின் FBI விசேட குழுவொன்று, கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இணையவழி மோசடி மையங்களை முறியடிக்க இலங்கை அதிகாரிகளுடன் கைகோர்க்கும் அமெரிக்காவின் FBI குழு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்தவும் நாடுகடந்த குற்றவியல் வலையமைப்புகளை முறியடிக்கவும் இலங்கை சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுடனான ஒத்துழைப்பை அமெரிக்கா வலுப்படுத்தியுள்ளது. 

இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, நாட்டில் இயங்கி வரும் இணையவழி மோசடி மையங்கள் தொடர்பான விசாரணைகளில் இலங்கை சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக அமெரிக்க மத்திய புலனாய்வுப் பணியகத்தின் (FBI) சார்லட் (Charlotte) கள அலுவலகத்தைச் சேர்ந்த குழுவொன்று, நேற்று (16) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கவும், விசேட தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கவும், நாடுகடந்த மோசடி வலையமைப்புகளை அடையாளம் கண்டு முறியடிப்பதற்கான அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகளின் திறனை வலுப்படுத்தவும் FBI விசேட குழுவொன்றை அமைத்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, புலனாய்வு நுட்பங்கள், டிஜிட்டல் தடயவியல் மற்றும் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்தல் ஆகிய துறைகளில் இலங்கை சட்ட அமுலாக்கல் தரப்பினருடன் இணைந்து FBI அதிகாரிகள் பணியாற்றவுள்ளனர். 

இணையவழி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், குற்றச் செயல்களைக் கண்டறியவும், இம்மோசடிகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக வலுவான வழக்குகளைத் தாக்கல் செய்யவும் இந்த ஒத்துழைப்பு புலனாய்வாளர்களுக்கு உதவும். அத்துடன், இணையவழி குற்றச் செயல்களை முன்னெடுப்பதற்கு நாடுகடந்த குற்றவியல் வலையமைப்புகள் இலங்கை மண்ணைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் இலங்கையின் திறனையும் இது வலுப்படுத்தும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT