வெயிலில் உணவுப் பொருட்களை வைத்திருந்த கொழும்பு வர்த்தகருக்கு 41,000 ரூபாய் அபராதம்

கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்தே குறித்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

வெயிலில் உணவுப் பொருட்களை வைத்திருந்த கொழும்பு வர்த்தகருக்கு 41,000 ரூபாய் அபராதம்
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

சூரிய ஒளி நேரடியாகப் படும் வகையில் தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை உள்ளிட்ட 8 உணவுப் பாதுகாப்பு விதிமீறல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 41,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்தே குறித்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தச் சோதனையின் போது, உணவுச் சட்டம் மற்றும் அது தொடர்பான ஒழுங்குவிதிகளை மீறும் வகையில், தின்பண்டங்கள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் கடுமையான சூரிய ஒளி நேரடியாகப் படும் நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமையை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த வர்த்தகர், தன்மீது சுமத்தப்பட்ட 8 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு மொத்தமாக 41,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், விதிமீறல்களுடன் தொடர்புடைய குறித்த உணவுப் பொருட்களை அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தவும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் பொதுச் சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவே இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT