நேற்று சனிக்கிழமை (01) முற்பகல் 11.45 மணியளவில் சென்னையிலிருந்து IndiGo 6E1175 விமானம் மூலம் வருகை தந்த குறித்த நபர், விமான நிலையத்தின் பசுமை வழிப்பாதையில் வைத்து அதிகாரிகளால் சோதனையிடப்பட்டார்.
12 உலோகக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் துரதிர்ஷ்டவசமாக 8 புறாக்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன.
அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையான 230 ரூபாய்க்கு பதிலாக, ஒரு கிலோ நாடு அரிசியை 240 ரூபாய்க்கு அந்த அங்காடி விற்பனை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
2025 ஒக்டோபர் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில், 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் - வாங்கல்கள் பற்றிய அறிக்கைப்படுத்தல் சட்டத்தின் (FTRA) விதிகளை மீறிய நிறுவனங்களுக்கே இந்த நிர்வாக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), யூடியூப், ஸ்னாப்சாட் போன்ற பிரபல சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
1944 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.