இணையவழி நிதி மோசடி: மருதானையில் சீன, இந்திய, பங்களாதேஷ் பிரஜைகள் 21 பேர் மடக்கிப் பிடிப்பு!

மருதானையில் உள்ள மூன்று மாடிக் கட்டடமொன்றில் இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 12 சீனர்கள் மற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட 21 வெளிநாட்டவர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையவழி நிதி மோசடி: மருதானையில் சீன, இந்திய, பங்களாதேஷ் பிரஜைகள் 21 பேர் மடக்கிப் பிடிப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு, மருதானை பகுதியில் இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 12 சீனர்கள், 6 இந்தியர்கள் மற்றும் 3 பங்களாதேஷ் பிரஜைகள் உட்பட 21 வெளிநாட்டவர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை, டெக்னிக்கல் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டடமொன்றில் இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டடத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இணையவழி நிதி மோசடிகளின் தன்மை குறித்தும், இதன் பின்னணியில் இயங்கும் சர்வதேச வலையமைப்புகள் மற்றும் உள்நாட்டுத் தொடர்புகள் குறித்தும் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ரன்மல் கொடித்துவக்கவின் நேரடி வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT