பிரித்தானிய பிரஜை போல் நடித்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய நபர் கொழும்பில் கைது

கொழும்பு - கோட்டை, கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளிலுள்ள நகை விற்பனை நிலையங்களில் பிரித்தானிய பிரஜை போல் நடித்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய சந்தேகநபர், ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பிரஜை போல் நடித்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய நபர் கொழும்பில் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பிலுள்ள பல நகை விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர் போல் நடித்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை, கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரிடமிருந்து 2,800 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மீட்கப்பட்ட திருடப்பட்ட நகைகளில் 68 சிறிய வைரக்கற்கள் பதிக்கப்பட்ட அரைப் பவுண் ரோஸ் கோல்ட் மோதிரம், இளஞ்சிவப்பு நீலக்கல் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் உட்பட மேலும் பல தங்க ஆபரணங்கள் உள்ளடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், கடந்த செப்டெம்பர் மாதம் மற்றும் இம்மாத காலப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் இத்திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

வெளிநாட்டவர்கள் அதிகளவில் தங்க நகைகளைக் கொள்வனவு செய்வதற்காக வருகை தரும் கொழும்பு - கோட்டை, துறைமுகப் பொலிஸ் பிரிவு மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட நகை விற்பனைத் தொகுதிகளுக்குச் சென்றே இவர் இத்திருட்டுகளை மேற்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரித்தானிய பிரஜை ஒருவரைப் போல் நடித்துள்ள சந்தேகநபர், தங்க நகைகளைக் கொள்வனவு செய்வதில் ஆர்வமுள்ளவர் போல் காட்டிக்கொண்டு, கடை ஊழியர்களால் காண்பிக்கப்படும் நகைகளைப் பார்வையிடும் சாக்கில் அவற்றைத் திருடிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT