கொள்ளுப்பிட்டியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலம் மீட்பு; ஓட்டோவில் வந்து வீசிச் சென்ற கும்பல்

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் காயங்களுடன் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத கும்பலொன்று ஓட்டோவில் வந்து சடலத்தை வீசிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொள்ளுப்பிட்டியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலம் மீட்பு; ஓட்டோவில் வந்து வீசிச் சென்ற கும்பல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாகவும், நேற்று சனிக்கிழமை (21) இரவு இனந்தெரியாத குழுவொன்று, ஓட்டோவில் வந்து குறித்த சடலத்தை அவ்விடத்தில் வீசிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இச்சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT