வாகன இறக்குமதி வரிக்கொள்கையில் மாற்றமா? மின்சார வாகனங்கள் தொடர்பிலும் முக்கிய ஆராய்வு!

வாகன இறக்குமதிக்கான வரி கணக்கீட்டு முறைமை, சுங்க மதிப்பீட்டில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் இறக்குமதிப் பொருட்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராயப்பட்டது.

வாகன இறக்குமதி வரிக்கொள்கையில் மாற்றமா? மின்சார வாகனங்கள் தொடர்பிலும் முக்கிய ஆராய்வு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் வாகன இறக்குமதி வரிக்கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்வது, மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குழுவின் தலைவர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்போது, வாகன இறக்குமதிக்கான வரி கணக்கீட்டு முறைமை, சுங்க மதிப்பீட்டில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் இறக்குமதிப் பொருட்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராயப்பட்டது.

மேலும், மின்சார வாகனங்களின் இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகைகள் மற்றும் கொள்கை ரீதியான ஊக்குவிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, மின்சார வாகனங்களின் மின்கலங்களைப் பாவனைக்குப் பின்னர் பாதுகாப்பாக அகற்றுதல் மற்றும் மீள்சுழற்சி செய்வதற்கான முறையான பொறிமுறையை உருவாக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், மின்சார வாகனங்களைச் சாதாரண மக்களும் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் வரிக்கொள்கைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் சூரிய சக்தி மூலம் வாகனங்களை மின்னேற்றும் முறைகளை ஊக்குவித்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

எனினும், வாகன இறக்குமதி வரியில் மாற்றம் ஏற்படும் என இதன்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT