கொழும்பு துறைமுகக் கடற்பரப்பில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு
கொழும்பு துறைமுகத்தின் படகு இல்ல இறங்குதுறைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் மிதந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றுப் புதக்கிழமை (18) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சுமார் 45 வயது மதிக்கத்தக்க குறித்த நபர், சடலமாக மீட்கப்பட்ட போது பழுப்பு நிறக் காற்சட்டையும் கறுப்பு நிற ரி-சேர்ட்டும் அணிந்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் கொலையா அல்லது வேறு ஏதேனும் சம்பவத்தால் நிகழ்ந்ததா என்பதைக் கண்டறிய கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.