ரூ. 4 பில்லியன் முதலீட்டு மோசடி: தனியார் நிறுவனத்தின் மேலும் ஒரு பணிப்பாளர் கைது

பெருந்தோட்ட முதலீட்டுத் திட்டங்களின் பெயரில் சுமார் 4 பில்லியன் ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் மேலும் ஒரு பணிப்பாளரை வணிகக் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ரூ. 4 பில்லியன் முதலீட்டு மோசடி: தனியார் நிறுவனத்தின் மேலும் ஒரு பணிப்பாளர் கைது
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

பெருந்தோட்ட முதலீட்டுத் திட்டங்களின் பெயரில் 2,500க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 4 பில்லியன் ரூபாய் தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படும் தனியார் நிறுவனத்தின் மேலும் ஒரு பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

லிமோ பிளஸ் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் லிமோ இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பெருந்தோட்ட முதலீட்டுத் திட்டங்கள் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் சேகரித்ததாகக் கூறப்படும் பாரிய அளவிலான நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தக் கைது நடவடிக்கை வணிகக் குற்ற விசாரணைப் பிரிவினரால் (CCIB) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களுடன் தொடர்புடைய ஏனைய இரண்டு பணிப்பாளர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, டிசெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை விஸ்தரித்து வருவதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT