விகாரமகாதேவி பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் கைது

கொழும்பு - விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட இரண்டு கத்திகளுடன் 58 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விகாரமகாதேவி பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் தடைசெய்யப்பட்ட இரண்டு கத்திகளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய நபரொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர்ப்பாட்ட களப் பகுதியில், கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி இரவு கொழும்பு தெற்கு வலய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின்போதே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட நபர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களாக இந்த ஆர்ப்பாட்ட பேரணியுடன் இணைந்து செயற்பட்டதோடு, ஆர்ப்பாட்ட நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் ஏதேனும் குற்றச் செயலை அரங்கேற்றும் நோக்குடன் இந்த ஆர்ப்பாட்ட களத்தில் தங்கியிருந்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் கடந்த 22ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த வழக்குத் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT